Subscribe Us

header ads

சவூதியிலிருந்து17வருடங்களின் பின் நாடு திரும்பிய பெண்! நெகிழ்சியான தருனங்கள் (வீடியோ & படங்கள்)

2000ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணொருவர் 17 வருடங்களின் பின் வெளிநாட்டுப் பணியகத்தின் முயற்சியால் மீண்டும் நேற்று நாடு திரும்பியுள்ளார்.

பாலைவன பகுதியொன்றில் பணியாற்றி வந்துள்ள குறித்த பெண் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்பற்றிருந்த நிலையில் அவரது குடும்பத்தார் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வெளிநாட்டுப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததாகவும் இதன் மூலம் சவுதி குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் உதவியுடன் அவரது இருப்பிடத்தை அறிந்து கொண்டு அவருக்கு சேர 36 இலட்ச ரூபா சம்பளத்துடன் நாடு திரும்ப உதவியுள்ளதாகவும் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அட்டவரலயைச் சேர்ந்த குசுமாவதி எனும் பெண்ணே இவ்வாறு நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments