Subscribe Us

header ads

இனிமேல் முச்சக்கர வண்டிகளுக்கு டெக்சி மீட்டர் கட்டாயம்

வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா என்ற ஆகக் குறைந்த அபராதத் தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரமளவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்தார்.

இந்த அபராதத் தொகையை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான சட்ட ஏற்பாடுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உந்துருளிகளின் தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை கூலிக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் முச்சக்கர வண்டிக்கு டெக்சி மீட்டர் இருத்தல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஓக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments