Subscribe Us

header ads

உயர் பயங்கரவாத நிதி அபாயங்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இணைப்பு



சமீபத்தில் சுவீஸ் குழு ஒன்று வெளியிட்ட ஆய்வு அறிக்கையில்  உயர் பயங்கரவாதத்திற்கு நிதி  அளித்தல் மற்றும்  பணமோசடி அபாயங்கள், அதிகம் உள்ள 50 நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 46 வது  இடத்தில் உள்ளது.

சுவிச்சர்லாந்தை சேர்ந்த  இலாப நோக்கத்திற்கான மையம் ஒன்று ஆய்வு ஒன்றை நடத்தியது. நிதி மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு  நிதி அளிப்பது  தொடர்பாக 146 நாடுகளில் இந்த ஆய்வு  நடத்தப்பட்டு உள்ளது. இதில் நேபாளம் மற்றும் இலங்கை  ஆகியவை குறியீட்டில் குறிப்பிட்ட அபாய மதிப்பெண்களுடன் நிற்கின்றன. 146 நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான்( 6.64 புள்ளிகள்)  46 வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த  அபாயங்கள் அதிகம்  உள்ள நாடுகளில் முதல் 10 நாடுகள்  ஈரான், ஆப்கானிஸ்தான், கினியா-பிசாவு, தஜிகிஸ்தான், லாவோஸ், மொசாம்பிக், மாலி, உகாண்டா, கம்போடியா மற்றும் தான்சானியா ஆகியவையாகும்.ஆபத்து அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் இடம் பெற்றிருக்கும் நாடு 8. 60 புள்ளிகளை பெற்று உள்ளது.



மிகவும் ஆபத்து குறைவாக உள்ள நாடுகள்  பின்லாந்து ( 3.40 புள்ளிகள்)  லித்துவேனியா மற்றும் எஸ்டோனியா நாடுகளாகும்.

இந்தியா 5.58 புள்ளிகளை பெற்று 88-வது இடத்தில் உள்ளது. 2016 ல் இருந்து மிகப்பெரிய முன்னேற்றங்கள் சூடான் , தைவான், இஸ்ரேல்  மற்றும் வங்காள தேச நாடுகளால்  உருவக்கபட்டு உள்ளது.

2017 ஆம் ஆண்டுகளில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் ஜமைக்கா, துனிசியா,ஹங்கேரி, உஸ்பெகிஸ்தான் மற்றும் பெரு நாடுகளாகும்.
தெற்கு ஆசியாவில் உள்ள ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை முறையே 8.38, 7.57 ,7.15 புள்ளிகள்  பெற்று 2-வது 14, மற்றும் 25-வது இடங்களை பெற்று உள்ளன.

Post a Comment

0 Comments