Subscribe Us

header ads

கத்தார் சிக்கலில் மத்தியஸ்தம் செய்ய அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.


குவைத்தின் அரசருடன் இணைந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது டிரம்ப், “ அமைதி திரும்ப வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எங்களால் ஆன முயற்சியை எடுப்போம்” என்றார்.

இவ்விஷயத்தை எளிதில் தீர்க்க முடியும் என்று கருதுகிறோம். இது குறித்து தூதுவர் டேவிட் ஃபிரீட்மேன் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நானும் இவ்விஷயத்தில் சமரசம் செய்ய விரும்புகிறேன் என்றார் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த டிரம்ப்.

கத்தாருக்கும், சவூதி அரேபியாவிற்கும் இடையில் பேச்சு நடத்த நான் விரும்புகிறேன். சமரச உடன்பாடு விரைவில் எட்டப்படக்கூடும் என்றும் அவர் கூறினார். ”தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை அவர்கள் நிறுத்த வேண்டும். அவர்கள் அப்படி செய்வார்கள் என்றே நினைக்கிறேன்” என்றார் டிரம்ப். 

குவைத்தின் அரசர் கத்தார் நாடு மேஜையில் அமர்ந்து தடை விதித்துள்ள நாடுகளின் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு தயார் என்று கூறியுள்ளது என்று தெரிவித்தார். இறையாண்மையை பாதிக்கும் கோரிக்கைகளை ஏற்க முடியாது. அமெரிக்காவிலுள்ள நண்பர்கள் பழைய நிலைக்கு நிலைமையை கொண்டுவர அவர்கள் உதவுவார்கள் என்று நம்புவதாக குவைத் அரசர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments