இயந்திரமயமான இந்நவீன யுகத்தில் மனிதனிடம் மனிதாபிமானப் பண்புகள் அருகி வருகின்றன.
தன்னலம் தான் எங்கும் நிறைந்திருக்கிறது.
எங்கு
பார்த்தாலும் வன்முறைகளும் சச்சரவுகளும் இடம்பெற்ற வண்ணம்
உள்ளன. அவற்றில் குடும்பவன்முறைகளின் பங்கும் பிரதானமானது.
குடும்பத்தில்
கணவன் மனைவியிடையே ஏற்படும் கருத்து மோதல்கள் தான் வலுபெற்று குடும்ப
வன்முறையாக விவாகரத்து மேடைகளுக்கு அத்திவாரமிட்டுள்ளது.
இன்றைய
கால கட்டத்தில் நிச்சய திருமணத்தை பார்க்கிலும்
பெரும்பாலானவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வதையே
விரும்புகின்றனர்.
காரணம், புரிதலுடனான கருத்தொருமித்த
வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வேண்டும் எனும் அடித்தளத்தில்!
இருப்பினும் இவ்வாறு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கூட
விட்டுக்கொடுப்பின்மை, புரிந்துணர்வின்மை, பொறுமையின்மை, அதித
கட்டுப்பாடு போன்றவற்றின் நிமித்தம் பிரிந்து வாழ்வதை இன்றைய
சமுதாயத்தில் காணக்கூடியதாக உள்ளது.
குடும்ப வாழ்வில் கைகோர்த்த பின் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டிய தேவையுள்ளது.
குடும்பமானது, தனிமனித வாழ்வியலோடும் சமூக வாழ்வியலோடும் தொடர்புபட்டது.
ஆகையால்
இதில் விட்டுக்கொடுப்பு பெரும்பங்கு வகிக்கின்றது.
பிரச்சினைகளும் சவால்களும் இல்லாது போனால் வாழ்வில்
சுவாரஸ்யமிருக்காது.
இதனை உணர்ந்து கொண்டு அதற்கான தீர்வுகளை
நுட்பமாக கையாள்பவர்களின் வாழ்வு சிறப்பாக அமையும். ஆனால்
எதிர்பாராத விதமாக நாம் எடுக்கும் திடீர் முடிவுகள் எம் வாழ்வினையே
கேள்விக்குறியாக்கிவிடும் என்பதால் குடும்ப வாழ்வினை
பொறுத்தவரையில் எந்த பிரச்சினையாகட்டும், அதற்கான
தீர்வுகளாகட்டும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட வேண்டிய
காட்டாயமும் தேவையும் உள்ளது.
காரணம் இந்நிலை கணவன் மனைவி
இருவரை மட்டுமல்லாது இவர்கள் சார்ந்த அனைத்து சமுதாயத்தினையே
பாதிப்புக்குட்படுத்தவல்லது.
ஆகையால் குடும்பம் வாழ்வு பிறருக்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டுமே தவிர விதிவிலக்காக அமைந்துவிடக்கூடாது.
ஆகையால் சந்தேகம் தீயை ஏற்படுத்த வல்லது.
வாழ்வில்
நிம்மதியை சீர்குலைக்கவல்லது. வள்ளுவனின்
ஈரடிக்குறளினைப்போல இவர்கள் இணைந்து வாழவேண்டும் காரணம் ஓரடி குறள்
பொருள் தராது என்பதனை புரிந்துக் கொள்ள வேண்டும். எண்ணங்கள்
ஒன்றுப்பட்டு அமைய வேண்டும்.
கணவன் ஒரு யோசனையை முன்வைத்தாலோ
அல்லது செயற்பாடொன்றை செய்ய விழைந்தாலோ மனைவி அதன் நன்மை தீமைகளை
விளக்கி அச்செயலை வெற்றிக்கரமாக முடிக்க உறுதுணைப் புரிய வேண்டும்.
கணவனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனை விடுத்து கணவனோ மனைவியோ
செய்யும் செயலுக்கு ஊறு விளைவித்து விட்டுக்கொடுக்காது
ஒருவருக்கொருவர் எதிரியைப் போல் ஆகிவிடக்கூடாது.
விட்டுக்கொடுப்பு என்பதை சற்று சிந்திப்போமானால் கணவன் மனைவி எனும்
பந்தம் புனிதமான ஒரு இணைப்பு.
பிறகு எதற்காக இந்த பிரிவினை என மனம் விட்டு சிந்திக்கும் போது பிரச்சினைகள் பின் தள்ளப்படுகிறது.
ஒருவரின்
மேல் ஒருவர் கொண்டுள்ள ஈடு இணையற்ற அன்பு, பாசம், உதவி, பிணைப்பு,
அரவணைப்பு இவற்றுக்கு மத்தியில் விட்டுக்கொடுப்பென்பது சாதாரண விடயம்.
அத்தோடு
எதிர்பாராது எடுக்கப்படும் திடீர் முடிவுகளால் பிரிந்து வாழும் சூழ்நிலையை
ஏற்படுத்திக் கொள்ளாமல் எம் எண்ணங்களில் தூய்மையை விதைத்துக் கொண்டால்
விட்டுக்கொடுப்பது சுலபமாகி விடும்.
ஆகவே இனிவரும் காலங்களிலாவது விவாகரத்து மேடைகளை தகர்ப்போம்.
0 Comments