புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவருமான M.H.M.நவவியின் தலைமையில் 19.08.2017 புத்தளம் நகரில் *வர்த்தக & சுயதொழில் மற்றும் இளைஞர் வலுவூட்டல் பயிலரங்கு* ஏற்பாடாகியுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் கடல் வளம், நில வளம், சுற்றுலாத் துறை, தென்னை முக்கோண வலயம் , முந்திரி செய்கை, விலங்கு வேளான்மை உட்பட பல வளங்களும் அதற்கு ஏதுவான சூழலும் அமைந்துள்ள போதிலும் நமது இளைஞர்கள் அவைகளில் நாட்டம் காட்டுவதோ, ஈடுபடுவதோ குறைவாகவே உள்ளது.
எனவே சுயதொழில் , வியாபாரம் போன்றவற்றில் நமது இளைஞர்கள் ஈடுபடுவதற்கு வழிகாட்டவும் , ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை வழங்கவும் நம் நாட்டில் பல நிறுவனங்களும் அமைப்புக்களும் அரசாங்கத்தின் கீழேயே இயங்குகின்றன. இவற்றிற்கு வருடாந்தம் அரசு பல மில்லியன் பணத்தை ஒதுக்கீடு செய்கின்றன.
மேலே குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில் ஒரு சில நிறுவனங்களையும் , மக்களையும் இணைக்கின்ற ஒரு நிகழ்வாகவும், கருத்துக்களை வழங்கும் நிகழ்வாகவுமே Future+ Puttalam 2017 வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலை சிறந்த விரிவுரையாளர்களும் , நிறுவன அதிகாரிகளும் , திணைக்கள பிரதிநிதிகளும் இதற்கு வளவாளர்களாக வருகை தரவுள்ளார்கள். இதிலே உங்களையும் கலந்து பயன் பெறுமாறு அன்பாக அழைக்கப்படுகிறீர்கள்.
*காலம் - 19.08.2017
*நேரம் - 2pm to 6pm*
*இடம் - கலாச்சார மண்டபம் , புத்தளம்*
*ஏற்பாடு - ACMC YOUTH
*தொடர்புகளுக்கு - 0777 366 119
0 Comments