நாடு பூராகவும் உள்ள நகை கடைகளில் கொள்ளையிட்டு வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொச்சிகடை காவற்துறையின் குற்றவியல் பிரிவால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவன் மற்றும் மனைவி , தமது மகளுடன் இணைந்து இந்த கொள்ளைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
நேற்று
இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து நேற்றைய
தினம் கொச்சிகடை நகை கடையொன்றில் கொள்ளையிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய்
பெறுமதியான ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொச்சிக்கடை நகை கடையொன்றில்
இருந்து சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுதியான ஆபரணங்கள் காணாமல் போயுள்ளதாக
கொச்சிகடை காவற்துறைக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.
நகை
கடையில் மற்றும் அருகிலுள்ள விற்பனை நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த
சிசிடிவி காணொளிகளை சோதனையிட்டதில் நபரொருவர் ஓடிச் சென்று
முச்சக்கரவண்டியில் ஏறும் காட்சி பதிவாகியிருந்தது.
இதன் போது ,
குறித்த முச்சக்கரவண்டியின் இலக்கத்தை கொண்டு விசாரணை செய்ததில் கொழும்பு
14 , டீ மெல் தோட்டத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் பிடிபட்டுள்ளனர்.
அவர்கள் மூலம் , கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன்
போது ,சந்தேகநபர்களின் வீட்டை சோதனையிட்டதில் கொச்சிகடையில்
கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட மேலும் ஒரு தொகை ஆபரணங்கள்
பெட்டியொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை தொடர்பில் , 43 வயதுடைய தந்தை , 34 வயதுடைய தாய் மற்றும் அவர்களின் 14 வயதுடைய மகள் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் நீர்க்கொழும்பு நீதிமன்றத்தில ்முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-HIRU NEWS-
0 Comments