எம்பிலிப்பிட்டிய மஹா வித்தியாலயத்தின் ஆசிரியர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வலய கல்வி காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆசிரியர் மீது, கடந்த காலங்களில் ஆரம்ப வகுப்பு மாணவிகள் பலரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையின் பின்னர் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர், காவல்துறையினரால் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிணையில் விடுதலையாகியுள்ளார்.
சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments