Subscribe Us

header ads

டுபாயில் காதலியின் காதை கடித்த இலங்கையருக்கு எற்பட்ட அவல நிலை! விபரங்கள் உள்ளே


வெளிநாடொன்றில் இலங்கையரின் 6 மாத சிறைத்தண்டனை நீக்குவதற்கான மேன்முறையீடு டுபாய் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் காதலியின் காதை கடித்துவிட்டு அவரது பணப்பையை திருடி சென்ற இலங்கையரின் மேன்முறையீடே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த சமையல்கார் ஒருவரின் கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 34 வயதான இலங்கையர் ஒருவர் தெரு ஒன்றில் இலங்கை பெண்ணின் பின்னால் சென்று அவரது காதின் ஒரு துண்டை கடித்து விட்டு, அவரது பணப்பையை திருடியதோடு அங்கிருந்து தப்பியோடியுளளார். எனினும் சில வாரங்களுக்கு பின்னர், அந்த நபர் மீண்டும் அந்த பெண்ணின் பையை பறித்து பணத்தை எடுத்து விட்டு அடுத்த நாள் திருப்பி கொடுத்துள்ளார்.
எப்படியிருப்பினும் காதை கடித்த சம்பவம் தொடர்பில் அந்த பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
ஜுன் மாதம் டுபாய் நீதிமன்றத்தில் இடம்பெற்ற முதல் வழக்கு விசாரணையின் போது, நிரந்தர இயலாமை காரணமாகவே தான் அந்த பெண்ணுக்கு அவ்வாறு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னால் முதன்மை தீர்ப்பை எதிர்த்து அந்த நபர் மேல்முறையீடு செய்தார்.
எனினும் டுபாய் நீதிமன்ற நீதிபதி Eisa Al Sharif மேன்முறையீட்டினை நிராகரித்து விட்டு 6 மாத சிறைத்தண்டனை உறுதி செய்துள்ளார்.
குற்றவாளியின் சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர் டுபாயில் இருந்து அவரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments