சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடுகளின் வளர்ச்சிக்காக நிதியுதவியை வாரி வழங்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பெற்று வருகிறது.
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடுகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற பணக்கார நாடுகள் தங்களது ஒட்டுமொத்த உற்பத்தியில் 0.7 சதவிகித நிதியுதியை வெளிநாடுகளுக்கு அளிக்க ஒப்புதல் அளித்தது.
இந்த விகிதாச்சாரம் நிதியளிக்கும் பணக்கார நாடுகளின் ஆண்டு வருமானத்தை பொறுத்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறி வருகிறது.
வெளிநாடுகளுக்கு பணக்கார நாடுகள் ஏன் நிதியுதவி அளிக்கிறார்கள்?
வளரும் நாடுகளுக்கு பணக்கார நாடுகள் நிதியுதவி அளிப்பதற்கு பல மறைமுக காரணங்களும் உள்ளன.
குறிப்பாக, ஒரு வளரும் நாட்டிற்கு ஒரு பணக்கார நாடு நிதியுதவி அளிக்கும்போது இரு நாடுகளுடன் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஒப்பந்தம் போடப்படும்.
அதாவது, நிதியுதவியை பெற்ற நாட்டிற்கு தேவையான முக்கிய பொருட்களை நிதியுதவியை வழங்கிய நாட்டிடம் இறக்குமதி செய்ய வேண்டும்.
இதன் மூலம், நிதியுதவி அளித்த நாட்டின் உற்பத்தி பொருட்கள் எளிதில் விற்பனை ஆவதுடன் அந்நாட்டின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
இரண்டாவதாக, சர்வதேச அளவில் நிதியுதவி அளித்த நாட்டிற்கு சிக்கல் ஏற்படும் நேரத்தில் அந்நாட்டிற்கு நிதியுதவி பெற்ற நாடு ஆதரவு அளிக்கும்.
மூன்றாவதாக, வளரும் நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் அந்த பணக்கார நாட்டின் செல்வாக்கும் மதிப்பும் பிற நாடுகள் மத்தியில் அதிகரிக்கும்.
இதனால் சர்வதேச அளவில் நிதியுதவி அளிக்கும் நாட்டிற்கு பெயரும் புகழும் கிடைப்பதுடன், இது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
இதுபோன்று நிதியுதவியை வாரி வழங்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் வெளியான பட்டியல் இதோ!
- அமெரிக்கா
- ஜேர்மனி
- பிரித்தானியா
- பிரான்ஸ்
- ஜப்பான்
- சுவீடன்
- நெதர்லாந்து
- நோர்வே
- கனடா
- ஐக்கிய அமீரகம்
- சவுதி
- கட்டார்
- துபாய்
2014-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா 30 பில்லியன் டொலரும், ஜேர்மனி 20 பில்லியன் டொலரும் நிதியுதவியாக வெளிநாடுகளுக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments