Subscribe Us

header ads

நன்றி மறக்காத மஹிந்த ! சுகயீனமுற்றுள்ள தனது நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்தார் ..


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை பேருவளைக்கு விஜயம் செய்திருந்த நிலையில்பேருவளையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தார்.

முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் ஊடக பணிப்பாளர் ஆஸப் அஹமட் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பகல்விருந்து உபசாரத்தில் கலந்துகொண்ட அவர் அதனை தொடர்ந்து தற்போது சுகயீனமுற்றுள்ள சீனன் கோட்டையைச்சேர்ந்த பிரபல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளரான முகம்மது ரவூபின் இல்லத்திற்கு சென்று சுகம் விசாரித்தார்முன்னாள் பேருவளை நகரபிதா மர்ஜான் அஸ்மி பளில் உட்பட பல பிரமுகர்களும் முன்னாள் ஜனாதிபதியுடன் வருகைதந்தனர். 

 பேருவளை முன்னாள் நகர பிதாவும் பேருவளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னாள் அமைப்பாளருமான மர்ஹும்எம்.எஸ்.எம்பளில் ஹாஜியாருடன் இணைந்து தேர்தல் காலத்தில் தனது வெற்றிக்காகவும் கட்சியின்முன்னேற்றத்ற்காகவும் முகம்மது ரவூப் செய்த பங்களிப்பை இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஞாபகமூட்டினார் .

நோய்வாய்ப்பட்டுள்ள தன்னை சந்தித்து சுகம் விசாரிக்க , தனது இல்லத்திற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷவுக்கு முகம்மது ரவூப் இதன்போது நன்றி கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் சமுகமளித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments