Subscribe Us

“மஹிந்த திருடன்... மஹிந்த திருடன்” என்று கோசமிட்டவருக்கு அடி உதை

அடையாளப்படம்

ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச நேற்று முன்தினம் குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியிருந்தார்.
ஷிரந்தியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் விசாரணைக்கு பிரிவிற்கு சென்றிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் ஆதரவாளர்களுக்கு மத்தியில் இருந்த ஒருவர் மீது அங்கிருந்த சிலர் கடுமையான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சிகப்பு நிற ஆடையில் வந்த இந்த ஆதரவாளர் கூட்டத்திற்கு மத்தியில் இருந்து “மஹிந்த திருடன்... மஹிந்த திருடன்” என கூச்சலிட்ட போது அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் பொலிஸாரின் தலையீடு காரணமாக குறித்த நபர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
அந்த நபரை அங்கிருந்து அழைத்து செல்லும் போது தொடர்ந்து மஹிந்த ராஜபக்சவை அவர் திட்டியவாறு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments