Subscribe Us

header ads

மீண்டும் என்னோடு இணைந்தால் ஹசனலிக்கு எம்.பி பதவி - ஹக்கீம் தெரிவிப்பு


தூய முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டாளரான எம்.ரி.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதற்கான காய்நகர்த்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தூரமாகி இன்று தூய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாக மக்கள் மத்தியில் களமிறங்கியுள்ள ஹசனலி மற்றும் பசீர் சேகுதாவூத் தரப்பு எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் கூட்டமைப்பாக போட்டியிடுவதற்கான பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில் மீண்டும் ஹசனலி தரப்பை கட்சியோடு ஒன்றிணைப்பதற்கான பேச்சை அமைச்சர் ஹக்கீம் முடுக்கிவிட்டுள்ளார்.
அந்தவகையில், தூய முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டாளரான எம்.ரி.ஹசனலியின் சகோதரரும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமான எம்.ரி.நிஸாமுடன் மு.காவின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் நீண்டநேரம் உரையாடியுள்ளார்.
"தேசியப்பட்டியல் எம்.பி. பதவியுடன், அமைச்சுப் பதவியையும் ஹசனலிக்கு உடன் வழங்குவதற்கு நான் தயாராகவுள்ளேன்'' என்று இதன்போது அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments