Subscribe Us

header ads

அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் விஜயதாஸ ராஜபக்சவிடம் தேரர்கள் கோரிக்கை


நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவை அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என தேரர்கள் குழுவினர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பௌத்த சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு நேற்று வந்திருந்தனர்.
அமைச்சரை சந்தித்து ஆசீர்வாதம் வழங்குவதற்காகவும், பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கோருவதற்காகவும் தாம் வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், அமைச்சர் அங்கு வருகை தராத காரணத்தால் அதிகாரிகளைச் சந்தித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டும். எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இராஜினாமா செய்யக் கூடாது என்று கோரிக்கை விடுப்பதாக ஊடகவியலாளர்களிடம் தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments