Subscribe Us

இலங்கையில் இவ்விடங்களில் பிச்சை எடுப்பவர்கள் இனி கைது செய்யப்படுவார்கள்


புகையிரத நிலையங்கள் மற்றும் புகையிரதங்களில் மேற்கொள்ளப்படும் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு விசேட வேலைத் திட்டங்களை மேற்கொள்ள புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது, இதுபோன்ற வர்த்தகர்களைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, புகையிரத பாதுகாப்பு பிரிவின் பிரதானி அனுர பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை புகையிரதங்களில் யாசகம் கேட்பவர்களையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தீர்மானித்துள்ளதாக புகையிரத பாதுகாப்பு பிரிவின் பிரதானி மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments