கொமர்ஷல் வங்கியின் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள் வினோதம் மிக்க ஹோட்டல்களில் தங்கவும், வாழ்வியலோடு தொடர்புடைய இலத்திரனியல் பொருள்களை கொள்வனவு செய்யவும், திரைப்படங்களை பார்வையிடவும், இணைய வழி கொடுக்கல் வாங்கல்களை அனுபவிக்கவும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மகத்தானதோர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு நாடு முழுவதும் உள்ள சுமார் 150 வர்த்தக நிலையங்களில் வருடம் முடியும் வரை வட்டியற்ற தெரிவுகளை அனுபவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வங்கி அறிமுகம் செய்துள்ள ´ஈஸிவெகேஷன்´ திட்டத்தின் அண்மைய அறிவிப்பின் மூலம் கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் 50 வீதம் வரையிலான கழிவுகளைப் பெறலாம். அமாயாஉனாஸ் போல்ஸ் கண்டி, அமாயாபீச் பாசிக்குடா, அமாயாலேங்டேல் நுவரஎலிய, அனன்தயாரெஸோட் அன்ட் ஸ்பாசிலாபம், பிஷர்மன்ஸ் பே,சீகிரியவிலேஜ், த பால்ம்ஸ், எக்ஹோசபாரி, தம்பாலேபொடிக் சலெட்ஸ், கிறேன்ட் உடவலவ்வசபாரிரெஸோட், த லேக் ஹோட்டல், த சேர்ப் ஹோட்டல், எல்ல ஜன்கிள் றெஸோட், சுஐருஹோட்டல்ஸ் அன்ட் றெஸோட் ஆகிய இடங்களில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்தச் சலுகையை அனுபவிக்கலாம்.
இவை தவிர கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள் அபான்ஸ் காட்சி அறைகளில் ஆகஸ்ட் 31 வரை வாழ்வியல் பொருள்களை கொள்வனவு செய்கின்ற போது 20 வீதகழிவினைப் பெறலாம் என வங்கி அறிவித்துள்ளது. 36 மாதங்களுக்கான வட்டியற்ற தவணைக் கொடுப்பனவு முறையின் கீழ் இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைய வழி சில்லறை வர்த்தகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு mystore.lk மற்றும் mydeal.lk இணைய மேடைகள் மூலம் கொள்வனவு செய்கின்ற போது கிரடிட் கார்ட்களுக்கு 15 வீதகழிவும் டெபிட் கார்ட்டுகளுக்கு ஐந்து வீத கழிவும் வழங்கப்படவுள்ளன. வட்டியற்ற 12 மாதகாலத்தக்கான தவணைக் கொடுப்பனவு தெரிவும் கிரடிட் கார்ட்டுகளுக்கு 24 மாதகால விரிவுபடுத்தப்பட்ட கொடுப்பனவு தெரிவும் வழங்கப்படும் என்றும் வங்கி அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தின் ஒவ்வொருவார இறுதியிலும் ஸ்கோப் சினிமா ஊடாக திரைப்பட டிக்கட்டுக்களை கொள்வனவு செய்கின்ற போது ஒவ்வொரு கொள்வனவுக்கும் மேலதிகமாக ஒரு டிக்கட் இலவசமாக வழங்கப்படும். மேலதிக மகிழ்ச்சி ஊட்டும் வகையில் திரை அரங்கில் ஒரு தொகை பொப்கோர்ன் மற்றும் கொக்காகோலா என்பனவும் இலவசமாக வழங்கப்படும்.
மேலதிகமாக கொமர்ஷல் வங்கியின் வட்டியற்ற மாதாந்த தவணைக் கொடுப்பனவு முறை தற்போது 150க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களில் தளபாடம், வீட்டு பாவனைப் பொருள்கள், இலத்திரனியல் பொருள்கள், கையடக்க தொலைபேசிகள், கம்பியூட்டர்கள், சுற்றுலா மற்றும் ஓய்வு, வாகனங்கள், இணைய வழி சில்லறை வர்த்தகம், சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி, காப்புறுதி மற்றும் நவநாகரிகம் என பல பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
´கொமர்ஷல் வங்கியில் எமது வாடிக்கையாளர்களுக்கு சமநிலையான வர்த்தகத் தெரிவுகளை வழங்க நாம் உறுதி பூண்டுள்ளோம். வருடாந்தம் விஷேட சலுகைகளை வழங்குவதற்கு மேலதிக மாககார்ட் வைத்திருப்பவர்களுக்கு கொம்பேங்க் மெக்ஸ் லோயல்டிதிட்டத்தின் மூலம் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலுக்கும் லோயல்டி புள்ளிகளையும் வழங்கி வருகின்றது´ என்று கூறினார் கொமர்ஷல் வங்கியின் கார்ட் நிலையத் தலைவர் துஷிதசுரவீர.
கொமர்ஷல் வங்கியின் கொம்டீல்; திட்டத்தின் மூலம் ஏற்கனவே கணிசமாக வழங்கப்பட்டு வரும் அனுகூலங்களை மேலும் மேம்படுத்தும் வகையிலேயே இந்தத் திட்டமும் அமுல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பிரதான சில்லறை விற்பனை நிலையங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதிசேர் சலுகைகளை பெற்றுக் கொடுப்பதோடு கிரடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு வட்டியற்ற தவணைக் கொடுப்பனவு வசதிகளையும் வழங்குவதே கொம்டீல் திட்டமாகும். கொமர்ஷல் வங்கிகார்ட் உரிமையாளர்கள் விஸா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள் நடத்தும் உலகளாவிய ஊக்குவிப்புத் திட்டங்களிலும் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். கொமர்ஷல் வங்கிகார்ட்டுகள் தான் இலங்கையில் மிகவேகமாக வளர்ச்சிகண்டு வரும் கார்ட்டுகளாகும். கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் வகைகளிலும் அவற்றோடு சம்பந்தப்பட்ட விற்பனைகளிலும் சந்தை தலைமைத்துவத்தையும் இந்த கார்ட்டுகளே கொண்டுள்ளன. சில்வர், கோல்ட், பிளேடினம் என விஸா மற்றும் மாஸ்டர்கார்ட் வகைகளையும், விஸா சிக்னேச்சர், வேர்ள்ட் மாஸ்டர்கார்ட், விஸா இன்பினைட் கார்ட்ஸ் என பல்வகை கார்ட்டுகளை கொமர்ஷல் வங்கி விநியோகிக்கின்றது. கார்ட்டுகள் டெப் அன்ட் கோ NFC தொழில்நுட்பத்தை கொண்டவை. உறுதியான NFC POS விற்பனை வலையமைப்பையும் இவை கொண்டுள்ளன.
கொமர்ஷல் வங்கியின் மெக்ஸ் லோயல்டி வெகுமதி திட்டம் தான் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் என இரு வகை கார்ட்டுகளுக்கும் வெகுமதிகளை அள்ளி வழங்கும் ஒரே திட்டமாகும்.
ஏழு வருடங்களாக தொடர்ந்து உலகின் தலை சிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியான கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 256 கிளைகளுடனும், 700 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016ல் 10 பிரதான சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இலங்கையின் தலை சிறந்த வங்கி, மிக உறுதியான வங்கி, மிக கௌரவமான வங்கி என பலவிருதுகளை உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளிடம் இருந்து கடந்த பல ஆண்டுகளில் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது. அத்தோடு இலங்கையின் மிகச் சிறந்த பத்து கூட்டாண்மை பிரஜைகளில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் பல வருடங்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
0 Comments