Subscribe Us

header ads

இலங்கையில் வருடாந்தம் 1283 சிசுக்கள் இறக்கின்றது ஏன்?


இலங்கையில் இடம்பெறும் சிசு மரணங்கள் குறித்து சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.
தாயின் வயிற்றில் இருக்கும் போதே வருடாந்தம் ஆயிரத்து 728 சிசுக்கள் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பிறந்த ஒரு வார காலத்துக்குள் வருடாந்தம் ஆயிரத்து 555 சிசுக்களும் வருடாந்தம் உயிரிழப்பதாக அமைச்சு கூறியுள்ளது.
பூரண வளர்ச்சியடையாமை, நிறை குறைதல், பிரசவத்தின் போது இடம்பெறக்கூடிய சிக்கல்கள் மற்றும் பிறப்பிலேயே ஏற்படக்கூடிய ஊனம் ஆகியனவே சிசு மரணத்திற்கான பிரதான காரணங்களான அமைச்சு தெரிவிக்கின்றது.
இதேவேளை, இது தொடர்பான விசேட செயலமர்வு ஒன்று சுகாதார கல்வி பணியகத்தால் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments