Subscribe Us

header ads

முதல் முறையாக நடந்த குழந்தை: துண்டாக வெட்டி எடுக்கப்பட்ட கால்! நெஞ்சை உருக்கும் சம்பவம் (PHOTOS)

விசித்திர நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் ஒரு கால் மருத்துவர்களால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்தவர் Joe (29). இவர் மனைவி Hayley Price (26) இவர்களுக்கு கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு Oliver என பெயர் வைத்து மகிழ்ந்தார்கள்.
பிறக்கும் போதே Oliver-வின் இடது காலில் சிவப்பு நிறத்தில் கட்டிகள் இரண்டு இருந்துள்ளது.
இது சாதாரண தழும்பு என நினைத்து பெற்றோர் இதை பெரிதாக எண்ணவில்லை. பிறகு நாட்கள் செல்ல செல்ல Oliver காலில் இருந்த கட்டி பெரிதாக வளர தொடங்கியது.
பிறகு மருத்துவர்களிடம் சென்று காட்ட அது வெறும் தழும்பு தான், அதனால் ஏதும் பிரச்சனையில்லை என கூறியுள்ளனர்.
அதன் பின்னரும் பிரச்சனை தொடர மான்செஸ்டரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு Oliver-ஐ Hayley அழைத்து சென்றுள்ளார்.
அங்கு Oliver-ஐ பரிசோதித்த மருத்துவர்கள் plexiform schwannoma என்னும் நரம்பியல் நோய் அவனை பாதித்துள்ளதை உறுதி செய்தனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் Oliver-ன் காலில் உள்ள கட்டிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கினார்கள்.
ஆனால் அடுத்த வாரமே கட்டி மீண்டும் முளைத்துள்ளது. இதையடுத்து Oliver-வின் இடது காலை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் அவன் பெற்றோரிடம் கூறினார்கள்.
இந்நிலையில், கடந்த மாதம் 2ஆம் திகதி Oliver-வின் இடது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இது Joe மற்றும் Hayley-க்கு சோகத்தை ஏற்படுத்தினாலும் மன உறுதியுடன் தாங்கி கொண்டார்கள்.
அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கு முன்னால் Oliver மருத்துவமனை வளாகத்தில் முதல் முறையாக நடக்கும் வீடியோவை Joe மற்றும் Hayley பதிவு செய்தார்கள்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறி வரும் Oliver, ஒற்றை காலுடன் மகழ்ச்சியாக தன்னம்பிக்கையுடன் விளையாடி வருகிறான்.
இந்நிலையில், இந்த விசித்திர நரம்பியல் நோய் குறித்த விழிப்புணர்வை Oliverவின் பெற்றோர் மக்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளர்கள்.



Post a Comment

0 Comments