இலங்கை ரூபாய் நாணயத்தின் பெறுமதி, வார இறுதியில் நிலையான பெறுமதியை பதிவு செய்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பணியாளர்களினால் கிடைக்கும் அந்நிய செலாவணி, இறக்குமதியாளர்களின் கோரிக்கைக்கு மேலாக டொலர் கிடைத்துள்ளது.
இதன் காரணமாக ரூபாயின் பெறுமதி நிலையான இடத்தை பிடித்துள்ளதாக நிதித் தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் பெறுமதி 153.78 - 78 ஆக பதிவாகியிருந்தது.
அரச வங்கிகளில் டொலருக்கான கோரிக்கைக்கைகள் அதிகம் காணப்படுகின்றன. எனினும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பணியாளர்களினால் கிடைக்கும் அந்நிய செலாவணி அதனை விடவும் அதிக பெறுமதியானதென நிதி தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் ரூபாயின் பெறுமதி இன்னமும் உயர் மட்டத்தில் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படுகின்ற 1.5 பில்லியன் டொலர் கடன் திட்டத்தின் இராண்டாவது பகுதியை விடுவிப்பதன் ஊடாக ரூபாய் பெறுமதி மேலும் வலுவடையும் என பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 Comments