உண்மை நிலையினை அறியாமல் ஒரு செய்திகளை பகிர்ந்து கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனமானது என்பதற்கு மிக சிறந்த உதாரணம் புத்தளத்தில் நடந்த இந்த சம்பவம்.
அதாவது முஸ்லிம் மாணவர்கள் காலில் விழுந்து வணங்குவது போன்று வெளியிடப்பட்ட காணொளிகளையும் புகைப்படங்களயும் பலர் பகிர்ந்து முஸ்லிம் மாணவர்களை கொச்சைப்படுத்தி இருந்தார்கள்.
ஆனால் இது முஸ்லிம் மாணவர்கள் செய்த விடயமல்ல. மாற்றுமத சகோதர மாணவர்கள் முஸ்லிம்களைப் போன்று செய்தது.
அதாவது மாற்று மத மாணவ மாணவிகள் முஸ்லிம்களைப் போன்று மேடை நாடகம் நடித்து விட்டு அதே ஆடைகளுடன் பரிசு பெறும் காட்சி தான் இது.
தயவு செய்து இந்த படங்களை வைத்து வீணாக எமது முஸ்லிம் மாணவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்.வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்.
0 Comments