Subscribe Us

header ads

இளைஞர்களுக்கு ஆபாச காணொளிக் காட்சிகளை காண்பித்த பிக்குவுக்கு கிடைத்த தக்க தண்டனை


இளைஞர்களுக்கு ஆபாச  காணொளிக் காட்சிகளை காண்பித்து ஆபாசமான முறையில் நடந்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பௌத்த பிக்கு ஹினட்டிகம சமிதவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை வழங்கியுள்ளது.

மேலும், ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலதிகமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்குமென அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு கொழும்பு மாளிகாவத்தை தொடர் மாடி விடுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை அழைத்து வந்து ஆபாச காணொளிகளை காட்டி ஆபாசமான முறையில் நடத்துக்கொண்டதாக இந்த பௌத்த பிக்குவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணைகளுக்கு பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, சமூகத்தை நல்ல பாதையில் வழிநடத்த வேண்டிய மதத்தலைவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாதென்று சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சட்டத்தின் பிரகாரம் வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனையை குற்றவாளிக்கு வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.
அதேவேளை இந்த பிக்குவுடன் ஆபாச வீடியோக்களை பார்த்ததாக குற்றஞ்சாட்ட இரு இளைஞர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் இளம் வயதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.

Post a Comment

0 Comments