இலங்கை மற்றும் கனடா அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடாக தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்து வந்த பெண்ணொருவரை பணியகத்தின் விசாரணைப்பிரிவு கைதுசெய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவிக்கையில், தொழில் தொடர்பான எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் அரசாங்கம் கனடாவுடன் செய்துகொண்டதில்லை. இவ்வாறான பொய் பிரசாரங்களை யாரும் நம்பவேண்டாம்.
அத்துடன் இதுபோன்ற தகவல்களை நம்பி வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள், பத்தரமுல்லையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இதனை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
0 Comments