ஜப்பான் இளைஞர்களுக்கு பாலியல் உறவு மீது ஆர்வமே இல்லை என்பது அண்மைய ஆய்வு ஒன்றின் முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை வெகுவாக குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
18
முதல் 31 வயது ஆண், பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 64 சதவீத இளைஞர்கள்,
தங்களுக்கு பாலியல் உறவு மீது ஆர்வமில்லை என்றும் இணையத்தளங்களில் ஆபாச
படங்கள் பார்ப்பதே தங்களுக்கு போதுமானதாக இருப்பதாகவும் கருத்து
கூறியுள்ளனர்.
மேலும் பாலியல் உறவால் பல்வேறு தொல்லைகள்
இருப்பதாகவும், இச்சைகளை போக்க சுய இன்பம் மற்றும் ஆபாச படம் பார்ப்பதையே
இளைஞர்கள் பலர் வழக்கமாக கொண்டுள்ளதாகவும் ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது.
இதனால், இன்னும் இருபது வருடங்களில் ஜப்பானின் மக்கள் தொகை வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளதாக ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.
உடனடியாக
இதுகுறித்து சமூக நல ஆர்வலர்கள் குடும்பம், குழந்தைகள் குறித்த
விழிப்புணர்வை இளைஞர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆய்வில்
ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.


0 Comments