Subscribe Us

header ads

புத்தளம் பொது நூலகம் தன்னியக்க நூலகமாக மாற்றம் (படங்கள் இணைப்பு)


அவுஸ்திரேலியா அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து உலக வங்கியின் அனுசரனையோடு உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாஹாண சபைகளின் கீழ் தேர்தெடுக்கப்பட்ட 40 சிறந்த நூலகங்களை தன்னியக்க நூலகமாக மாற்றும் வேலைதிட்டம் நிரைவு பெற்று மக்கள் பாவனைக்காக திறந்து வழங்கப்பட்ட நிகழ்வு விமர்சையாக புத்தளம் பொது நூலகத்தில் நடைபெற்றது.


K.a. Baiz அவர்கள் நகர சபை தலைவராக இருந்த போது புத்தளம் பொது நூலகத்தை அபிவிருத்திச் செய்து, வடமேல் மாகாணத்தினால் வருடா வருடம் நடாத்தப்படும் போட்டி நிகழ்சிகளில் பங்கு கொள்ளச் செய்ததன் மூலம் வடமேல் மாகாணத்தின் மூன்றாவது சிறந்த நூலமாக புத்தளம் பொது நூலகம் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நிகழ்சி திட்டத்தினுள் உள்வாங்கச் செய்து இன்று இலத்திரணியல் நூலகமாக உருமாரியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

-Mohamed Sakeer-








Post a Comment

0 Comments