எமது பிள்ளைகள் கா.போ.த சாதாரன தர (O/L) பரிட்சையில் சிறந்த பெருபேறுகளை பெற்று உயர்தரத்தில் விஞ்ஞானம், கணித, வர்த்தக, தொழில்நுட்ப பிரிவு பாடங்களை கற்பதற்காக வருடா வருடம் கல்பிட்டியிலிருந்து வெளியூர்களுக்கு 65-80 மாணவர்கள் செல்கின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.
ஊரில் உயர்தரத்தில் இப்பாட பிரிவுகள் இல்லாமையினாலேயே மாணவர்கள் வெளியூரில் சென்று கல்வி கற்கும் நிலை தோன்றியுள்ளது. இவ்வாறு வெளியூர்களுக்கு சென்று படிக்கும் அனைவரும் கோடிஸ்வரன் வீட்டு பிள்ளைகள் இல்லை என்பது எம் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு தெறிந்திருக்கும் இதில் அதிகமான மாணவர்கள் நடுதர குடும்பத்தை சேர்ந்தவர்களும், ஏழைகளுமே.
சுய தொழில் செய்யும் பெற்றோர்களின் மாத வருமானம் இவர்களை படிக்க வைப்பதிலேயே நிறைவடைகிறது.
இவர்களுக்கான மாதா மாத செலவு 12000-15000 வரையில் ஆகும். இவற்றை அங்கே கொண்டு செலவலித்து படிப்பதை விட எமது ஊரிலே அதற்கான ஒரு ஏற்பாட்டை செய்து அதில் அரைவாசி தொகை பணத்தை செலவு செய்து பெற்றோர்களில் பாதுகாப்பிலே இருந்து பாடிப்பதற்கான விடயம் குறித்து எவராவது சிந்தித்ததுன்டா?
அனைத்து வளங்களும் எமது ஊரிலே காணப்படுகிறது ஆனால் இருக்கும் ஒரே ஒரு குறைபாடு ஆசிரியர்கள் இன்மையே.
15000 ரூபா செலவலிக்கும் எம்மவர்கள் வெருமனே 3000-5000 ரூபாவை ஆசிரியர்களுக்காக வேண்டி செலவிட்டு Doctor, Engineer, Accountant... ect போன்றோரை உருவாக்கி ஊரையும் ஊர் பாடசாலையையும் வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்வதை பற்றி சிந்தித்துள்ளீர்களா??
அல்லது பாடசாலை நிர்வாகம் இவ்வாறு முயற்சிகள் எடுத்துள்ளாதா?
(பாடசாலையில் அனைத்து பாடங்களும் உள்ளது வந்து படி என்றால் எப்படி வருவார்கள்? சிறந்த ஆசிரியர்களை கொண்டுவர முயற்சித்தால்தானே.)
Doctor Engineer ஆகவேண்டும் என்ற எதிர்பார்பில் O/L யில் சிறந்த பெருபேற்றை பெற்று விட்டு இன்று எமது ஊரில் கலை பிரிவில் கல்வி கற்க வேண்டிய நிலை. காரணம்
1.அன்னியசூழல் பழக்கமற்றவர்கள்.
2.ஊரில் கணித விஞ்ஞான பிரிவு இல்லை.
3.பிள்ளைகளின் பாட தெறிவு விடயத்தில் பெற்றோர் ஆசிரியர்களின் தலையீடு.
எமது ஊரிலிருந்து அதிகம் கல்வி நாடி செல்லப்படும் இடங்கள் வர்த்தக பிரிவிற்கு
1. கடையாமோட்டை
2. வரகாபோல
3. கொழும்பு க்கும்
கணித விஞ்ஞான பிரிவிற்கு
1. விஞ்ஞான கல்லூரி புத்தளம்
2. மன்னார் மாவட்ட அனைத்து பாடசாலைகள்
3. கெகுணகொல்லை பாடசாலை
4. கெகுணகொல்லை ASDA கல்வி நிறுவனம்
5. *கண்டி மாட்ட (#தனியார்_கல்வி நிலையங்கள்)
6. கல்முனை
போன்ற ஊர்கள் பாடசாலைகளில் உயர் கல்வியை தொடரகூடிய நிலை.
1.எங்கள் ஊரிலேயே பிள்ளைகள் கல்வி கற்குமானால் பெற்றோரின் பாதுகாப்பின் கீழ் இருந்து படிக்க முடியும்.
2.நல்லொழுக்கம் பேணி இஸ்லாமிய சூழலில் படிக்க முடியும்.
3.பெண் பிள்ளைகள் பஸ் ஏரி அலைந்து திறிய வேண்டிய அவசியம் இல்லை.
4.தாம் உண்ணும் உணவையே பிள்ளைகளும் உற்கொள்ள முடியும்.
5. வீடு ஓலை குடிசை என்றாலும் வீட்டிலிருந்து படிப்பது போல் வராது.
6. பிள்ளைகளின் கல்வி நிலை பற்றி ஆசிரியர்கள், அதிபர்களிடம் கேட்டு கொள்ள முடியும்.
உங்கள் பிள்ளைகளின் A/L பற்றி சிந்திப்பதும் ஊரின் கல்வியின் நிலை பற்றி தெறிந்து வைத்திருப்பதும் ஒவ்வொரு பெற்றோர் இனதும் கடைமையாகும்.
எமக்கு தேவை ஊரின் கல்வி வளர்ச்சியே..
கல்பிட்டியின் கல்வி வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் வாசித்துவிட்டு நண்பர்களுக்கிடையே பகிருங்கள், தெறிவியுங்கள், சிந்தியுங்கள்.
-Irfan Rizwan-
0 Comments