Subscribe Us

header ads

இளம் பெண் ஒருவரை கொடூரமாக வன்புணர்வு செய்து கொலைசெய்யும் வீடியோ ஒன்றை தயார் செய்யவே வித்யாவை கொலை செய்தோம் - முகமது இப்லார் அதிரடி வாக்குமூலம்


சுவிற்சர்லாந்தில் மாபியா குழுவைச் சேர்ந்தவர்கள் இளம் பெண் ஒருவரை கொடூரமாக வன்புணர்வு செய்து கொலைசெய்யும் வீடியோ ஒன்றை தயார் செய்து தரவேண்டும் என தன்னிடம் ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்ததற்கு அமையவே வித்தியாவை கடத்தி கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்த தாக சுவிஸ்குமார் என்னிடம் கூறினார். 

அத்துடன்  பெரிய அரசியல்வாதி ஒருவரு டைய சகோதரரினதும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரினதும் உதவியோடே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து கொழும்புக்கு தான் தப்பிச் சென்றதாகவும் அவர் என்னிடம் கூறினார் என புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் 6 வது சாட்சியான முகமது இப்லார் மூன்று தமிழ்மொழிபேசும் மேல்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். 
குறித்த மாணவியின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள  தமிழ் மொழி பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசவர் இளஞ்செழியன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார்  நீதிமன்றில் தொடர் விசாரணையாக இடம்பெற்று வருகின்றது.
நேற்றைய தினம் தொடர் வழக்கு விசாரணையின் மூன்றாவது நாளாக சாட்சிப் பதிவிற்காக மன்று கூடியிருந்தபோது இவ் வழக்கில் 6ஆவது சாட்சியான முகமது இப்லார் என்பவரது சாட்சிப் பதிவுகள் ஆரம்பமாகியிருந்தது. இவரது சாட்சியத்தை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்துடனும் ஏனைய அரச சட்டவாதிகள் குழுவினருடனும்  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் ரட்ணம் நெறிப்படுத்தினார். 
இங்கு சாட்சி மேலும் தெரிவிக்கையில், 
சுவிட்சர்லாந்திலுள்ள மாபியா குழுவொன்றின் மூலம் கிடைத்த ஒப்பந்தத்துக்கிணங்கவே ஓர் இளம்பெண்ணை கொடூரமாக வன்புணர்ந்து கொலை செய்வது போல் வீடியோ தேவைப்பட்டமையினால் வித்தியாவை கடத்தி கூட்டு வன்புணர்வு செய்து கொலைசெய்ததாக சுவிஸ் குமார் என்னிடம் கூறினார். அங்குள்ள மாபியா குழு ஒன்றின் மூலமாக இந்த ஒப்பந்தம் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். 
இதற்கிணங்க சிறிலங்காவில் இருந்தவர்களிடம் இதற்கு ஏற்பாடு செய்ததாகவும் அதன் பின் தான் சுவிட்சர்லாந்திருந்து வந்ததகவும் சம்பவம் நடந்த அன்று தானும் இன்னும் 3 பேரும் கொழும்பில் இருந்ததாகவும் கொழும்பில் இருந்ததற்கு ஆதாரமாக சிசிரிவி கமராவில் பதியப்படும்  வகையிலான இடங்களில் இருந்ததாகவும் சுவிஸ்குமார் என்னிடம் கூறினார். 
வித்தியாவை வன்புணர்வு செய்யும்போது அந்த இடத்தில் தான் இருந்திருந்ததால் தானே முதலில் அவளை வன்புணர்ந்திருப்பேன் என்றும் கூறியதுடன் அதுபோலவே எனது மனைவிக்கும் நடக்கும் என்று கூறி என்னை எச்சரித்தார்.
இந்த வன்புணர்வு வீடியோவை கூகுள் ட்ரைவ் மூலம் சுவிசுக்கு அனுப்பியதாகவும் வித்தியாவை கொலை செய்த இடத்துக்கு அண்மையில் கடற்படை முகாமொன்று இருப்பதனாலேயே அதற்கு அண்மையாக வித்தியாவை வன்புணர்வு செய்து கொலை செய்து போட்டதாகவும் இதனூடாக கடற்படையினர் பக்கம் இதனைத் திசை திருப்ப முயற்சித்ததாகவும் சுவிஸ்குமார் கூறினார் என்றும் சாட்சி தெரிவித்தார். 

Post a Comment

0 Comments