Subscribe Us

header ads

இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் தஸ்லிமா நஸ்ரீன் அவுரங்காபாத் விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்


வங்கதேசத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன். இவரது எழுத்துக்கள் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்துவதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரீனின் ‘விசா’வை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில் தஸ்லிமா நஸ்ரீன் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட திட்டமிட்டார். அதற்காக நேற்று அவர் அந்த மாநிலத்தின் தலைநகர் மும்பையில் இருந்து விமானம் மூலம் அவுரங்காபாத்தில் உள்ள சிகல்தானா விமான நிலையத்திற்கு வந்திறங்கினார்.
சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளரின் வருகையை அறிந்துகொண்ட மஜ்லிஸ் கட்சியினர் விமான நிலைய வளாகத்தில் கூடி ‘தஸ்லிமா திரும்பிப்போ’ என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தஸ்லிமா நஸ்ரீனை அவுரங்காபாத் மண்ணில் கால் வைக்க விடமாட்டோம் என போராட்டக்காரர்கள் உறுதிபட தெரிவித்தனர்.
எனவே சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு தஸ்லிமா நஸ்ரீனை போலீசார் அடுத்த விமானத்திலேயே மும்பைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments