Subscribe Us

header ads

இலங்கை கிரிகட் அணிக்கு ஓர் நற்செய்தியும் மற்றும் ஓர் மோசமான செய்தியும்




நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை அணித்தலைவர் சந்திமால், இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சந்திமால், முதல் டெஸ்டில் நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சந்திமால் இந்த வாரம் அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும் இது உறுதிப்படுத்தவில்லை, ஆனால் அவர் இந்தயாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் விளையாடுவார் என தான் எதிர்பார்ப்பதாக ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் விரல் முறிவால் பாதிக்கப்பட்ட அசேல குணரத்ன இரண்டு மாத ஓய்வுக்கு பின்னரே அணிக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம், காலே டெஸ்டிலெ் விரலில் காயம் ஏற்பட்ட ஹேரத், தான் இரண்டாவது டெஸ்ட் விளையாடுவேன் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments