Subscribe Us

header ads

பசுவில் இருந்து எயிட்ஸ் நோய்க்கு மருந்து; அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


பசு மாட்டின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து எய்ட்ஸ் நோயை எதிர்க்கும் மருந்தைக் கண்டுபிடிக்கும் புதிய வழிமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
விஞ்ஞான இதழான Nature இல் எயிட்ஸ் நோயை எதிர்க்கும் மருந்து தொடர்பில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க விஞ்ஞானிகள் பசுவைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டு, எயிட்ஸ் நோய்க்கான தங்களது புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன்போது, நான்கு பசுக்கன்றுகளுக்கு எச்.ஐ.வி வைரஸை செலுத்தி, ஆராய்ச்சி மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சிகரமான முடிவு கிடைத்துள்ளது.
எச்.ஐ.வி வைரஸ் செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதனை எதிர்கொள்வதற்கான சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி பசுவின் உடலின் உருவாகியமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து எச்.ஐ.வி வைரஸ்களுக்கு எதிராக பசுவின் உடலில் உருவான அன்டிபயோடிக்களை பிரித்தெடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள், அதனை மனிதனுக்கு பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், மனிதன் உடலில் இத்தகைய சக்தி வாய்ந்த அன்டிபயோடிக் ஏன் உருவாகுவதில்லை என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவின் National Institute ofAllergy and Infectious Diseases நிறுவனத்தின் தடுப்பூசித்துறை இயக்குநர் ஜோன் மாஸ்கோலா தெரிவிக்கையில்,
எய்ட்ஸ் நோய்க்கான நேரடியான தடுப்பூசியை கண்டுபிடிக்க தற்போது நடைபெற்றுள்ள ஆய்வுகள் போதுமானதாக இல்லை. எச்.ஐ.வி வைரஸ் மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து எவ்வாறு தப்பிக்கின்றது என்பது குறித்தும் எந்தவித முடிவுகளும் இந்த சோதனையில் கிடைக்கவில்லை.
எனினும், இந்த முடிவுகளால் எய்ஸ்ட்க்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளோம் என்பது மட்டும் உறுதி என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments