Subscribe Us

வைஃபை மூலம் ஹேக்கிங்... தடுக்க ஆப்பிள் தந்திருக்கும் அப்டேட்!


ஆப்பிள் ஐஃபோன், மேக் மற்றும் ஐபேடு ஆகியவற்றுக்குப் புதிய அப்டேட்டை தந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஹேக்கிங்கை தவிர்க்க இந்த அப்டேட் மிக மிக அவசியமானது.
தொடர்ந்து மொபைல் பயனர்களை அச்சுறுத்தும் வகையில் பல விதமான மால்வேர்கள், வைரஸ் போன்றவை அதிக அளவில் பரவி வருகின்றன. அதிலிருந்து மொபைல்களைப் பாதுகாக்க அவ்வப்போது அப்டேட் பேட்ச்களை மொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
மொபைல் போனில் இருக்கும் ப்ராசஸரில் வைஃபை சிப் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் ஒரு கோடை ரன் செய்து ஹேக் செய்ய முடியும். சமீபத்தில் இப்படிப் பல மொபைலக்ள் ஹேக் செய்யப்பட்டன. Broadpwn என்றழைக்கப்படும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வைத்தான் இந்த அப்டேட் மூலம் கொடுத்திருக்கிறது ஆப்பிள். 
ஆப்பிள் மொபைல் யூஸர்கள் இந்த அப்டேட்டைப் பெற, Settings > general Software update
மேக் பயனர்கள் ஆப் ஸ்டோருக்கு சென்று அப்டேட்ஸ் டேபை க்ளிக் செய்யவும். 

Post a Comment

0 Comments