Subscribe Us

சவூதி நாட்டின் அரசர் சல்மானை அளவிற்கு அதிகமாக புகழ்ந்த காரணத்தால் அல் ஜசீரா பத்திரிக்கையாளர் பணி நீக்கம்


சவூதி நாட்டின் அரசர் சல்மானை அளவிற்கு அதிகமாக புகழ்ந்த காரணத்தால் பத்திரிக்கையில் கட்டுரை எழுதுபவர் ஒருவர் அரசரின் கட்டளைக்கமய தனது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரமலான அல் அன்சி என்னும் கட்டுரையாளர், அல் ஜசீரா பத்திரிக்கையில் பொதுவாக கடவுளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை கொண்டு அரசரை பாராட்டினார்.

அரசரை அளவிற்கு அதிகமாக புகழ்வது சகஜமான ஒன்றுதான் மேலும் அது எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயமும் கூட. ஆனால் கடவுளுடன் ஒப்பிடுவது என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று.


அதன் விளைவாக "மிகவும் அதிர்ச்சியடைந்த" அரசர் சல்மான், அன்சியை இடைநீக்கம் செய்ய உத்தரவு வழங்கியதாக செளதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு என்று சல்மானுக்கு நன்கு. தெரிந்துள்ளது .


Post a Comment

0 Comments