'திவயின' சிங்கள நாளிதழில் வெளியான செய்தி. WhattsApp குரூப் ஒன்றில் பகிரப்பட்டது. முதலில் இதனை வாசியுங்கள்.
இஸ்லாம் சமயம் ஒரு கட்டுக்கதை (புராணம்/ புனைவு) என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டதினால் தாம் அதில் இருந்து விலகியதாக ‘ஸ்ரீலங்கா முன்னர் முஸ்லிம் சங்கம்’ தெரிவிக்கின்றது.
இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்களின் இயக்கமான ‘ஸ்ரீலங்கா முன்னர் முஸ்லிம் சங்கம்’ ஊடக அறிக்கையின் மூலம் சகல முஸ்லிம்களிடம் கோருவது என்னவென்றால், அளவு கடந்து இஸ்லாம் சமயத்தை நம்புவதினாலும் பின்பற்றுவதினாலும் ஆபத்தான விளைவுகள் ஏற்படக் கூடும் என்பதால் அதில் இருந்து விலகிக்கொண்டோம் என்பதாகும்.
நீங்கள் நம்புவதைப்போன்று அன்மைக் காலம் வரை அளவு கடந்து இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றினோம். ஆனால் அதுவொரு கட்டுக்கதை எனப் புரிந்துகொண்டதன் பின்னர் அந்த நம்பிக்கையில் இருந்து விலகினோம். இலங்கைவாழ் அனைவரின் நலனுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் அவதானமாக நடந்துகொள்ளுமாறு அன்பின் முஸ்லிம் மக்களிடம் கோருகின்றோம்.
சிறிய கூட்டமொன்று இஸ்லாத்தைத் தீவிரமாகப் பின்பற்றிக்கொண்டு இக் காலப் பிரிவில் நடந்துகொள்வதினால் சிறிய கூட்டமொன்று இஸ்லாத்தைத் தீவிரமாகப் பின்பற்றிக்கொண்டு இக் காலப் பிரிவில் நடந்துகொள்வதினால் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களுக்கு தூண்டுகோல் கிடைக்கின்றது.
சில வருடங்களுக்கு முன் பேருவலை பள்ளிவாசலொன்றில் நடைபெற்ற படுகொலை, அன்மையில் காத்தான்குடியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஒத்துழைக்கும் இயக்கமொன்று மேற்கொண்ட தீவிரவாத செயல்கள், கடந்த ரமழான் நோன்பு காலத்தில் ஓட்டமாவடியில் இஸ்லாமிய பிரிவொன்றைத் தாக்கியமை, பொருநாள் அன்று தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களைத் தாக்கியமை, ஐ.எஸ்.ஐ.எஸ். இலங்கை உறுப்பினர் மரணித்தமை ......
ஆகவே இஸ்லாம் ஒரு கட்டுக்கதை (புராணம் அல்லது புனைவு) எனப் புரிந்துகொண்டு சுயபுத்தியுடன் வாழுமாறும் அதில் கூறப்படும் தீவிரவாத கருத்துக்களினால் பெரும்கேடுகள் ஏற்படக் கூடும் என்றும் ஒரு காலத்தில் முஸ்லிம்களாக இருந்த நாங்கள் தாழ்மையுடன் கோருகின்றோம் என்றும் ஸ்ரீலங்கா முன்னர் முஸ்லிம் இனத்தவர் கேட்டுக்கொண்டனர்.
நாங்கள் மட்டும் சத்தியத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு கூறும் வார்த்தைகள், எழுதும் கட்டுரைகள், செய்யும் காரியங்கள் இஸ்லாத்தைப் பொய்யாக்க நினைப்போருக்கு துணைக் கருவிகளாகப் பயன்படுகின்றது.
.......................................................................................................
மேல் .... (புள்ளிக்கோடு இட்ட) ஐந்தாவது பந்தியைப் படித்திருப்பீர்கள். நாம் எங்கு? என்ன தவறு செய்கின்றோம் என்பதை அப் பந்தி சுட்டிக்காட்டுகின்றது.
தமிழாக்கம்: Hisham Hussain - Puttalam


0 Comments