பிணை முறியில் சிக்கியுள்ள அலோசியஸ் மஹேந்திரனிடம் இருந்து சொகுசு வீடு ஒன்றுக்கு வாடகைப்பணம் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை மூலம் தெளிவாகியுள்ளதாக கூறிய அவர்,
குறித்த பணம் பிணை முறிகளை பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டதாக கூறப்பட்ட போதும் அது கல்குடா மதுபான தொழிற்சாலைக்கு வரி சலுகை வழங்கவே அது றவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
ரவி கருனாநாயக்குவுக்கு இவ்வளவு பாரிய தொகை வழங்கப்பட்டிருப்பதாக இருந்தால் முறி மோசடியின் முக்கிய சூத்திரதாரி ரனில் விக்ரமசிங்கவுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.
0 Comments