Subscribe Us

header ads

சவூதியில் விசிட் வீசாவில் தங்கியிருப்பவர்களின் கவனத்திற்கு! அதிகம் பகிருங்கள்!


சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரின் ரெஸிடென்ஸி விசாவின் மீதும் 2017 ஜூலை 1 முதல் புதிதாக 100 ரியால் தீர்வை வசூலிக்கப்படுகிறது. இதுவே 2018 ஆம் ஆண்டு 200 ரியால்களாகவும், 2019 ஆம் ஆண்டு 300 ரியால்களாகவும், 2020 ஆம் ஆண்டு 400 ரியால்களாகவும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பல வெளிநாட்டு ஊழியர்களும் ரெஸிடென்ஸி விசாவில் உள்ள அவர்தம் குடும்பத்தினரும் கணிசமாக சவுதியை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் விசிட் விசாவில் உள்ள குடும்பத்தினரும் இத்தீர்வையை செலுத்த வேண்டும் என்ற குழப்பம் நீடித்ததை தொடர்ந்து விசிட் விசாவில் உள்ளவர்கள் செலுத்தத் தேவையில்லை என்றும் விசிட் விசாவை நீட்டிப்பதற்கு (Extension Fee) மட்டும் 100 ரியால் கட்டணம் செலுத்தினால் போதும் என சவுதி ஜவாஜத் விளக்கமளித்துள்ளது.



எவராவது விசிட் விசாவுக்கு அல்லது அதன் நீட்டிப்புக்கு 100 ரியால் தீர்வை செலுத்தியிருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகி தங்களது பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும் ஜவாஜத் அறிவுறுத்தியுள்ளது.



Source: Saudi Gazette

தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments