சவுதியில் வீட்டுப் பணியாளர்களாக பணியாற்றுபவர்களின் நலன்சார் 13
வகை திருத்தங்களை சவுதி தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சகம்
வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து 3 மாதங்களுக்கு சம்பளம் அல்லது இடைப்பட்ட மாதங்களில்
முறையாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் முதலாளிகளிடமிருந்து புதிய
முதலாளியின் கீழ் மாறிக் கொள்வதற்கான அனுமதி.
விமான நிலையத்தில் வந்திறங்கும் வீட்டுப் பணியாளர்களை அழைத்து
செல்லாத முதலாளிகள், சவுதிக்கு வருகை தந்த பின் பாதுகாப்பு மையங்களில்
(shelter house) தங்க வைக்கப்பட்டு 15 தினங்களாகியும் தங்கள் வீடுகளுக்கு
அழைத்துச் செல்லாத முதலாளிகள், ரெஸிடென்ட் பெர்மிட் அடிக்காதவர்கள் மற்றும்
விசா காலாவதியாகி 30 நாட்கள் ஆன பின்பும் புதுப்பிக்கத் தவறிய முதலாளிகள்,
வீட்டுப் பணியாளர்களை ஏமாற்றி பிறரிடம் வீட்டு வேலைக்கு அனுப்பும்
முதலாளிகள், உறவினர் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் முதலாளிகள்,
உயிருக்கும் உடலுக்கும் கேடுதரும் அபயகரமான பணிகளில் ஈடுபடுத்தும்
முதலாளிகள் போன்றோரிடமிருந்தும் விடுதலை பத்திரம் பெற்று பிறரிடத்தில்
வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம்.
அதேபோல் உடல்ரீதியாக துன்புறுத்தப்படும் தொழிலாளர்கள் அவர்களின்
முதலாளியின் மீது குற்றம் சுமத்திய நிலையில், தொழிலாளர்கள் மீது பொய்யான
குற்றச்சாட்டுக்களை சுமத்தும் முதலாளிகள், தொழிலாளர்களால் புகாருக்கு
உள்ளான முதலாளிகள் தொடர்ந்து 2 முறை விசாரணைக்கு வராவிட்டால், பணியாளர்
தாயகத்திற்கு பயணம் செய்ய இயலாத வகையில் வெளிநாட்டிற்கு போய்விட்ட
முதலாளிகள், சிறைபட்ட முதலாளிகள், இறந்து விட்ட முதலாளிகள் அல்லது வேறு ஏதோ
ஒரு காரணத்தால் தொடர்ந்து 3 மாதங்கள் சம்பளம் கொடுக்க
இயலாதவர்களிடமிருந்தும் வேலையை விட்டு விலகி புதிய முதலாளியிடம் சேர்ந்து
கொள்ளலாம்.
அதேவேளை புதிதாக வேலைக்கு எடுக்கும் புதிய முதலாளிகள் குறிப்பிட்ட
பணியாளரின் ரெசிடென்ட் விசா மாற்றுக் கட்டணம் மற்றும் பாதுகாப்பு
இல்லங்களில் தங்கியிருந்த ஒவ்வொரு நாளுக்கும் 150 ரியால்கள் என கணக்கிட்டு
செலுத்தி வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழில்: நம்ம ஊரான்


0 Comments