Subscribe Us

header ads

புத்தளம் ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாமியின் பெருநாள் பலகார விநியோகம்


அல்லாஹ்வின் பேருதவியால் பல வருடங்களாக ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்  புத்தளம் மற்றும் ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாமியின் உதவியுடன் நடைபெற்றுவரும் மாற்று மத மக்களுக்கான பெருநாள் பலகார விநியோகம் இம்முறையும் சில புதிய அணுகுமுறைகளோடு சிறப்பாக நடந்து முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.

நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு எமது முதியோர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வு வழமைபோன்று இம்முறையும் புத்தளம் தள வைத்தியசாலை,பொலிஸ் நிலையம், கிறிஸ்தவ தேவாலயம், சிறைச்சாலை போன்ற இடங்களில் இட்ம்பெற்றது.

 அத்தோடு விஷேடமான ஒரு ஏற்பாடாக பெரும்பான்மை மக்கள் செரிந்து வாழும் இடங்களுக்கு எமது பலகாரங்கள் மற்றும் இனிப்புப்பண்டங்களை வீடு வீடாக சென்று வழங்கி சந்தோஷமாக எமது பெருநாளை அவர்களுடன் கொண்டாடினோம். ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தேச விவகார தலைவர் அஷ்ஷெயக்.ஆஸாத் சிராஸ் (நளீமி) கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வுக்கு பண மற்றும் பொருள் உதவிகளை செய்த புத்தளம் பெரிய பள்ளிவாயல், ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாமி,சமூக ஆர்வலர்கள்,ஊர் நலன்விரும்பிகளுக்கும் இப்பணிக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கிய ஜம்இய்யாவின் ஊழியர்கள் அனைவருக்கும் ஜஸாகுமுல்லாஹு ஹைரன்.

இதேபோன்று இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த முறைகளிலும் இவ்வாறான சமூகப்பணிகளில் உங்கள் பங்களிப்புகளை செய்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்.

-Irfan R.-








Post a Comment

0 Comments