முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் அவர்களும்,
அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களும் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான கூட்டணி ஒன்று
அமைப்பதில் பொது உடன்பாடு காண முயற்சிப்பதாக அறியக்கிடைக்கின்றது.
இந்த கூட்டணியில் ஹசன் அலி தலைமையிலான முஸ்லிம்
காங்கிரஸ் அதிருப்தி அணியினர் உற்பட முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான அனைத்து சக்திகளையும்
ஒன்றிணைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதுடன், அதாஉல்லாஹ் அவர்களும், ரிசாத்
பதியுதீன் அவர்களும் நேரடியாக சந்தித்து விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
தனக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்
பதவி வழங்காததனால் ரவுப் ஹக்கீமை எப்படியும் பழி வாங்கவேண்டும் என்று துடிக்கும்
பசீர் சேகுதாவூத் அவர்கள் இந்த கூட்டணியை அமைப்பதில் பிரதான தீவிர ஏற்பாட்டாளராக
செயல்பட்டு வருகின்றார்.
இந்த கூட்டணிக்கு முஸ்லிம் கூட்டணி என்று
பெயர்கொண்டு அழைக்கப்பட்டாலும் உண்மையில் இதனை முஸ்லிம் கூட்டணி என்று கூற
முடியாது. ஏனெனில் இந்நாட்டு முஸ்லிம்களின் அதிகமான ஆதரவினை கொண்ட முஸ்லிம்
காங்கிரசின் வகிபாகம் இல்லாமல் பதவிக்கான சிலரது ஒன்றிணைவே இந்த கூட்டமைப்பாகும்.
இதில் உள்ள எவரும் சிங்கள தேசிய கட்சிகளின் தயவு
இல்லாமல் பாராளுமன்றம் சென்றதில்லை. அதாவது தங்களது கட்சியின் மூலமாக எந்தவொரு
பொது தேர்தல்களிலும் போட்டியிட்டது கிடையாது. அப்படி இருக்கும்போது இவர்களை
எவ்வாறு முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று அழைக்க முடியும்?
இதில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் முரண்பட்ட கருத்துக்கள்
உடையவர்களாக இருந்தாலும், பொது எதிரியான முஸ்லிம் காங்கிரசினையும், அதன் தலைவர்
ரவுப் ஹக்கீமையும் அழிக்க வேண்டும் என்ற கொள்கையே இந்த கூட்டணியின் பிரதான
கொள்கையாக தென்படுகின்றதே தவிர, சமூகம் சார்ந்த எந்தவித கொள்கைகளும் இவர்களிடம்
இல்லை.
அதாவது இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின்
எதிர்கால அபிலாசைகள் என்ன என்றும், எவ்வாறான கோரிக்கைகளை முஸ்லிம் மக்கள் சார்பாக
முன்வைப்பது என்ற எந்தவித திட்டங்களும் இவர்களிடம் இல்லை. மாறாக தேர்தலில்
முஸ்லிம் காங்கிரசை எவ்வாறு தோற்கடிக்க முடியும் என்றும், எதிர்வரும் தேர்தலை
தாங்கள் எவ்வாறு வெற்றிகொள்வது என்றுமே இவர்கள் விவாதித்துள்ளார்கள்.
இதில் உள்ள சிலர் தாங்கள் எதிர்பார்த்தது போன்று
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தொடர்ந்து பதவி வழங்காததனால், அவரை தனிப்பட்ட ரீதியில்
பழிவாங்கி தங்களது வஞ்சகத்தினை தீர்த்துக்கொள்ள துடிப்பவர்களும், முஸ்லிம்
காங்கிரசை தோற்கடிப்பதன் மூலம் தங்களது கட்சியை முன்னிலைப்படுத்தி முஸ்லிம்களின்
தேசிய தலைவராக வருவதற்கு கனவு கண்டு கொண்டிருப்பவர்களும் ஒன்று சேர்ந்ததாகவே இது
கருதப்படுகின்றது.
இந்த கூட்டணியானது பிரதானமாக அம்பாறை
மாவட்டத்தினை மையமாக வைத்தும், எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலை இலக்காகவும்
கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இதில் நிலையான வாக்கு வங்கிகளை கொண்டவராக முன்னாள்
அமைச்சர் அதாஉல்லாஹ் மட்டுமே உள்ளார். அவருக்கு அக்கரைப்பற்றில் சுமார் 15 ஆயிரம்
வாக்குகள் உள்ளது. ஆனால் இவ்வளவு எண்ணிக்கை உடைய நிலையான வாக்குகள் ரிசாத்
பதியுதீனுக்கோ, அவரது கட்சிக்கோ அல்லது வேறு எந்த தனிப்பட்ட நபருக்கும் அம்பாறை
மாவட்டத்தில் இல்லை.
இதன் தொடரை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்...............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 Comments