Subscribe Us

header ads

ஒசாமா பின்லேடனை மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டேன்: ராபர்ட் ஓ நீல்



2011 மே மாதம் இரண்டாம் திகதியன்று பாகிஸ்தானின் ஜலாலாபாத், அபோட்டாபாதில் ரகசியமாக மறைந்து வாழ்ந்த ஒசாமா பின்லேடனை, அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை கமாண்டோக்கள் சுட்டுக்கொன்றனர். 

ஒசாமா பின்லேடனை சுட்டது யார், ஒசாமா மீது எத்தனை குண்டுகள் பாய்ந்தன என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. 

எனினும், அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை அதிகாரி ராபர்ட் ஓ நீல் எழுதியுள்ள புத்தகத்தில், ´தன்னால் சுடப்பட்ட மூன்று குண்டுகளால்தான் ஒசாமா பின்லேடன் உயிரிழந்ததாக´ குறிப்பிட்டிருக்கிறார். 

பின்லேடன் மீதான அதிரடித் தாக்குதலில் ஈடுபட்ட 400 பேர் கொண்ட அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை காமாண்டோக்களில் ராபர்டும் ஒருவர். 

அவர் எழுதியுள்ள ´த ஆபரேட்டர்´ புத்தகத்தில் ஒசாமா குறிவைக்கப்பட்டது தொடர்பான பல முக்கிய நிகழ்வுகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்`. 

2001 இல் உலக வர்த்தக மையத் தாக்குதலின் போது, ஜெர்மனியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படைப்பிரிவில் நானும் இடம்பெற்றிருந்தேன். 

தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்தபோது, நான் மின்னஞ்சல் ஒன்றை தட்டச்சு செய்து கொண்டிருந்தேன். 

விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை, மற்றவர்களைப் போலவே நானும் தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். 

இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஒசாமா பின்லேடன் இருந்ததும் சற்று நேரத்தில் தெரியவந்தது. 

இது அல்-கொய்தாவின் வேலை என்று புரிந்ததும், நாங்கள் ஒரு பெரிய யுத்தத்திற்கு தயாராக வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையில் ஒசாமா பின்லேடனின் கதையின் இறுதி அத்தியாயத்தை முடித்துவைத்தோம்.

Post a Comment

0 Comments