Subscribe Us

header ads

மத்திய கிழக்கில் தற்போது வெப்பம் 45 பாகையைத் தாண்டி அடித்துக் கொண்டிருக்கின்றது! அவதானம் மக்களே...


மத்திய கிழக்கில் தற்போது வெப்பம் 45 பாகையைத் தாண்டி அடித்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் AC இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. அந்த AC ஆனது நமக்கும் நமது உடமைகளுக்கு பாதிப்பாக அமையும் சந்தர்ப்பங்களும் உண்டு என்பதை மறக்க வேண்டாம். பகல் நேரங்களில் அதிக வெப்பம் இருப்பதன் காரணமாக பெரும்பாலானவர்கள் ACயை OFF செய்யாமல் காலையில் வேலைக்கும் சென்று விடுவது வழக்கம். அது போன்று செய்வதனால் நாம் இல்லாத நேரத்தில் ஏதாவது மின் ஒழுக்கும் ஏற்பட்டு AC தீப்பற்றக் கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கின்றது என்பது உண்மையாகும். 

இது போன்று சம்பவம் நேற்று எமது சகோதரர் ஒருவரின் கட்டிடத்தில் பதிவாகியுள்ளது. யாருமே இல்லாத நேரத்தில் ACயை ஆன் செய்து வைப்பது வழக்கம். நேற்று பகல் நேரத்தில் சென்று பார்க்கும் போது அறையின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது காணக்கிடைத்துள்ளது. அவரது அதிஷ்டம் தீயினைக் கண்டு கொண்டதனால் தீயடைப்பு கருவியைப் பாவித்து பாதியில் அணைத்து விட்டார்.

இதுவே யாரும் அறைக்கு வராத நேரமாக இருந்தால் முழு அறையும், எரிந்து சம்பலாகி நாம் எமது உடமைகளை இழக்க நேரிட்டு இருக்கும் என்பது உண்மை. ஆகவே சிந்தித்து செயல் படுங்கள். தங்களது அறைகளை விட்டு வெளியேறும் போது ACக்களை சரியான முறையில் OFF செய்து விட்டு செல்லுங்கள். ACயை மட்டுமல்ல அனைத்து மின் சாதனைக் கருவிகளையும் OFF செய்து விட்டு செல்வது எமது உடமைகளின் பாதுகாப்பிற்கு சிறந்தது.

(விளிப்புணர்வுக்கான அதிகம் பகிருங்கள்)








Post a Comment

0 Comments