Subscribe Us

header ads

15 வருடங்கள் சவூதியில் சம்பளம் வழங்கப்படாத பெண், 50 இலட்சம் நஷ்டயீட்டுன் இலங்கை வந்தடைந்தார்.


கடந்த  15 வருடங்களாக சம்பளம் வழங்கப்படாது சவூதி அரேபியாவில் பணியாற்றிய பெண் ஒருவரை நாட்டுக்கு அழைத்து வர முடிந்துள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல குறிப்பிட்டுள்ளார். 

வரலாற்றில் இலங்கை பணியாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அதிகூடிய நஸ்டஈட்டையும் (ஐம்பது இலட்சத்து ஐநூற்று தொன்றூற்று எட்டு) - 5,000,598 .00) இவருக்கு பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments