Subscribe Us

header ads

வளைந்து கொடுத்தது கட்டாருக்கு எதிரான சவுதி கூட்டனி! கட்டளையிட்ட 13 நிபந்தனைகளில் 6 வாபஸ் ஜெஸீரா மூடு விழா காணத்தேவையில்லை!


கட்டாருடனான ராஜதந்திர முறுகலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் புதிய ஆறு அம்ச தீர்வு யோசனையொன்றை முன் வைத்துள்ளன கூட்டணி நாடுகள்.
கடந்த தடவை அல்ஜசீரா, துருக்கி இராணுவத்தளத்தையும் மூடுதல் உட்பட 13 அம்சங்கள் அடங்கிய நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் அது யதார்த்தமற்றது என கட்டாரினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவ்வாறான சர்ச்சைக்குரிய அம்சங்களை நீக்கி, கடந்த ஜுலை 5ம் திகதி கூட்டணி நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க இவ் ஆறு அம்ச யோசனை முன் வைக்கப்பட்டுள்ளதென சகோதர இணையத்தள மத்திய கிழக்கு செய்திப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவையாவன:
  • தீவிரவாதம், பயங்கரவாதத்துக்குத் துணைபோவோருக்கு எந்த வகையிலும் அடைக்கலம் தர மறுத்தல், நிதி உதவிகளைத் தடுத்தல்
  • வன்முறையைத் தூண்டல் மற்றும் வெறுப்பூட்டல் நடவடிக்கைகளைத் தவிர்த்தல்
  • 2013 ரியாத் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் மற்றும் 2014 செயற்திட்டத்துக்கமைய திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
  • 2017 அரபு, ஆபிரிக்க, அமெரிக்க இஸ்லாமிய மாநாட்டின் தீர்மானங்களை ஏற்று நடத்தல்
  • ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
  • சர்வதேச அமைதி மற்றும் சமாதான ஒத்துழைப்புக்கிணங்க பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான பொறுப்பேற்றல் ஆகும்.
இஹ்வான்களின் பிரச்சார ஊடகமாக இயங்கி வருவதாக அல்ஜசீரா மீது குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ள போதிலும், அதனை மூடுவது தான் ஒரே வழியில்லையென்பதால் கட்டார் மேற்குறிப்பிட்ட விவகாரங்களுடன் இணங்கிச் செயற்பட முன் வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்காக சவுதி தூதர் அப்துல்லாஹ் அல் முவல்லமி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் - http://www.arabnews.com/node/1131636/middle-east

Post a Comment

0 Comments