சவுதியில் கல்வித்துறை சார்பாக பெரியோர்களுக்கான 2 மாத கோடைகால சிறப்பு கல்வி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களின் வழியாக வயதான சுமார் 900 ஆண், பெண் மாணவமணிகள் பயன்பெற்று வருகின்றனர்.
பிஷா (Bisha) என்ற ஊரைச் சேர்ந்த யஹ்யா பின் ஃபயி அல் ரீத்தி என்ற 100 வயது பெரியவரும் ஆர்வமுடன் எழுதப், படிக்கக் கற்று வருகிறார். தனது தள்ளாத வயதிலும் உடல்நிலை குன்றியுள்ள போதும் தவறாது வகுப்புக்கு வரும் யஹ்யா அவர்கள் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறி வருவதாகவும், தற்போது அல் குர்ஆனை படிக்க முடிவதாகவும் பெருமிதப்படுகிறார்.
சுமார் 30 ஆசிரியர்களின் தீவிர பயிற்சியின் கீழ் இயங்கும் இந்த கல்வி முகாமில் பயிலும் மற்றொரு வயதான பெரியவர் இப்ராஹீம் பின் அஹமது சயீத் அல் பரஜ் அவர்கள் கூறியதாவது, நிலத்தை உழுவதையும் விவசாயப் பணிகளையும் சற்று ஒத்திவைத்து விட்டு தன் வயது ஒத்த மாணவர்களுடன் கலந்து எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வது மிகவும் மனநிறைவையளிப்பதாக தெரிவித்தார்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்


0 Comments