Subscribe Us

header ads

திருமண வரவேற்பில் நடனமாடிய மணமகன் திடீர் மரணம்!



பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் சசிகாந்த் பாண்டே என்பவரின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண வரவேற்பின்போது, காரில் வந்த மணமகனை இறக்கி தங்களுடன் நடனமாடும் படி, நண்பர்கள் கூறியதையடுத்து, மணமகன் ஆடத்தொடங்கினார். 

இதையடுத்து, சிறிது நேரத்தில் மணமகன் மயங்கி சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பாண்டேவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

திருமண வீடு துக்க வீடாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Post a Comment

0 Comments