Subscribe Us

header ads

யாழ் மக்களுக்கு அமைச்சர் ரிஷாத் ஏற்பாட்டில் பித்ரா கொடுப்பனவு (படங்கள் இணைப்பு)

பாறுக் ஷிஹான்


புனித ரமழான் மாத நோன்பினை முன்னிட்டு இலங்கையில் பல பாகங்களிலும் வழங்கப்பட்டுவந்த அமைச்சர்   ரிஷாத் பதியுதீனின்  நோன்பு கால கொடுப்பனவான 'பித்ரா' அரிசி  யாழ் ஒஸ்மானியா கல்லூரி  முன்றலில்   (24)  வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நயினாதீவு சாவகச்சேரி மண்கும்பான் மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் மீளக்குடியமர்ந்து வாழ்ந்துவரும் சுமார் 950 முஸ்லிம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ நிறையுடைய     அரிசிப் பைகள்  வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வு மீள்குடியேற்றத்துக்கான வடக்குச்செயலணியின் இணைப்பாளர்   சுபியான் மௌலவி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  யாழ் மாவட்ட அமைப்பாளர் அமீன் ஹாஜியார் ஆகியோரின் ஒத்துழைப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட கிளையின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின்  யாழ் மாவட்ட கிளையின் தலைவர் கே.எம்  நிலாம் செயலாளர் ஆர்.கே  சுவர்கஹான் மற்றும் எம்.எல்  நிராஸ் எம்.எச்  சுவைஸ்  சையுபுதீன்  மிஸ்னூன் ரொயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.







Post a Comment

0 Comments