Subscribe Us

பயங்கரவாதத்திற்கு துணை செல்வதாக கூறி கத்தாருடனான உறவை சவுதி அரேபியா, எகிப்து, பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் முறித்துக் கொண்டன.


சவுதி, எகிப்து, பஹ்ரைன், ஓமான், டுபாய் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் கத்தார் நாட்டுடனான ராஜதந்திர உறவை துண்டித்துள்ளன!

பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கவே இந்த அதிரடி தீர்மானம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கத்தார் நாட்டவர்களை 14 நாட்களுக்குள் வெளியேறி செல்லுமாறு பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், பஹ்ரைன் நாட்டவர்களை 48 மணிநேரத்திற்குள் கத்தாரில் இருந்து வெளியேறுமாறு கட்டார் அறிவித்துள்ளது!

அத்தோடு, தமது தரை, கடல், ஆகாயவழிகள் எதையும் கத்தார் இனி பயன்படுத்தமுடியாது என்று இந்த நாடுகள் அறிவித்துள்ளதால், கத்தார் விமானங்கள் பயணிப்பதற்கு ஈரானின் ஆகாய வழியை பயன்படுத்த வேண்டிய நிலைக்குதள்ளப்பட்டுள்ளது. 



எனினும் இதற்கு ஈரான் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. 

( தில்ஷான் முகம்மத்)

Post a Comment

0 Comments