Subscribe Us

header ads

சவூதியின் கயவாளித்தனமான அரசியலுக்கு முடிவே இல்லையா?!

– முஹம்மத் பகீஹுத்தீன் –

கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு சவூதி புத்திஜீவிகளில் ஒருவரான தனது தோழர் ஒருவரை சந்திக்கின்றார்.
இருவரும் வழமைபோன்று அறபு-இஸ்லாமிய பிச்சினைகள் குறித்து கருத்துப் பரிமாறுகின்றனர்.
சவூதி சகோதரர் தனது நாட்டின் அரச குடும்பத்தின் பரிதாப நிலையையையும் அவமானத்திற்குரிய அவஸ்தை பற்றியும் மனம் திறந்து கதைத்தார்.
பாவம் அங்கே அரச குடும்பத்தில் போட்டி, பொறாமை, சூழ்ச்சி, அதிகாரப் போரட்டம் உச்சம் கண்டுள்ளது. தள்ளாடும் வயதில் உள்ள ஆட்சியாளர்கள் முதுமையின் சிகரம் கண்டுள்ளனர். அவர்கள் அரசியல் ஞான சூனியங்கள். உருப்படியில்லாத ஆட்சியாளர்கள். ஓன்றுக்குமே திராணியற்ற உதவாக்கரை மன்னர்கள். சொல்லவே வெட்கம் படிப்பறிவில்லாத பாமர ஜாதிகள்.
துரதிஷ்டவசமாக அதிகாரம் அனைத்தும் அவர்களின் கையில். அந்த அதிகாரங்களுக்கு வானமே எல்லை. வானத்திற்கும் எல்லை இருக்கலாம் ஆனால் அவர்கின் அதிகாரம் அதற்கு எல்லையே இல்லை. கண்மூக்கு இல்லாத அடக்குமுறை. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என மனம் நொந்து கொள்ளும் குடிமக்கள். அதையும் பெருமூச்சு விட்டு சப்தம் போட்டு சொன்னால் சிறைக்குள் அடக்கம்.
நான் என் சவுதி நண்பணிடம் கேட்டேன்: இந்த சீர்கெட்ட நிலையை சரி செய்வதற்கு ஒரு அறிவார்ந்த உணர்வுள்ள ஒரு மனிதன் கூட கிடைக்கவில்லையா?
அவர் கூறினார். ஒரே ஒருவர் இருக்கிறார். அவர்தான் முஹம்மத் நாயிப். அவர் முடிக்குரிய இளவரசர். அவர் மீது மக்களும் அதிகமான அரசு குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வைத்துள்ளனர். அவர் அரசராக பொறுப்பை எடுக்க வேண்டும் என மக்கள் பேராவல் கொண்டுள்ளனர். அவருக்கு அந்த தகுதி, திறமை, ஆற்றல், அனுபவம் அனைத்தும் இருக்கிறது. சாக்கடைக்குள் ஒரு மாணிக்கமாக அவர் பார்க்கப்படுகிறார்.
தறிகெட்ட சவுதி அரசு முஹம்மத் நாயிபை கவிழ்த்து விட்டது. ஒரு இரவில் அரசியலுக்கு தூக்கு போட்டுவிட்டது. டோனால்ட் டிரம்புக்கு முஹம்மத் நாயிபை ஓரமாக்க வேண்டும் என்ற ஒரு ஆசை. டிரம்ப் நாடினார். ஸல்மான் தெய்வ வாக்காக எடுத்து செய்து முடித்தார்.
அதே கயவனின் ஆசைக்கு இன்று சவுதியும் அமீரகமும் சகோதர நாடான கடாரை வம்புக்கு இழுத்துள்ளது. உலகமே பதற்றத்துடன் பார்க்கும் அளவிற்கு நிலைமை பூதாகரமாக மாறியுள்ளது.
சில மாதங்களில் எல்லாம் முடிந்து விடும் என்று கூறிக் கொண்டு சவுதி அரசு யெமனில் போராட்டத்தை தொடங்கியது. இன்று மூன்றாவது வருடம் தெடார்கிறது. யமென் தேசம் அழிந்து நாசமாகிறது. உருப்படியான ஒரு முடிவும் காணவில்லை. பாவம் யமனியர்கள் முன்பு காணத வறுமையில் வாடுகின்றனர்.
இது மட்டுமா! அரச குடும்பத்தின் சூழ்ச்சிகள் சொல்லிமாளாது.
2011ம் ஆண்டு மன்னர் அப்துல்லா, எகிப்தின் ஜனாதிபதியாக அன்று இருந்த ஹுஸ்னி முபாரகுக்கு சார்பாக உதவ முன்வந்தார். அறபு வசந்தமான மக்கள் புரட்சியை முடக்கு வதற்காக சவுதி நாட்டின் காசு பணத்தை வகை தொகையின் வாரியிறைத்தார். ஆனால் புரட்சியில் ஹுஸ்னி முபாரக் மண்ணைக் கவ்வினார். கோடிக்கணக்கான சவுதிப் பணம் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிப் போனது.
முர்ஸி பெரும்பான்மை மக்கள் விருப்ப வாக்கால் ஆட்சிக்கு வந்தார். உடன் அண்டையில் இருந்த மன்னர்கள் ராணுவ சதி மூலம் அவரை கவிழ்ப்பதற்கு மீண்டும் பணம் வழங்கினார்கள். சதிப் புரட்சி நடந்தேறியது. இன்று வரை எகிப்து மக்கள் படு பயங்கரமான துயர்தில் வாழுகின்றனர். இனி அங்கு என்னதான் நடக்கப்போகுது என்பது அந்த ரப்புக்கு மாத்திரமே வெளிச்சம்.
இது ஒரு சவுதி நண்பர் கலாநிதி ரய்ஸுனியுடன் கலந்துரவாடிய போது பேசப்பட்ட தகவல்கள். நொந்த சவுதி அறிஞரின் உணர்வுகளை என் வார்த்தைகளால் சிறைப்பிடித்துள்ளேன்.
இப்படி மனதுக்குள் புலம்பும் இன்னும் ஆயிரம் சவுதியர்கள் மறைந்து வாழ்வதில் எந்த சந்தேகமும் இல்லை.
NOTE: முடிக்குரிய இளவரசர் முஹம்மத் நாயிப் இருக்க, அண்மையில் சவூதியின் முடிக்குரிய இளவரசராக முஹம்மத் பின் சல்மான் தெரிவு செய்யப்பட்டார். -Meel Parwai-

Post a Comment

0 Comments