Subscribe Us

header ads

இளைஞர் அலுவல்கள் தூதுவர் ஜயத்மா விக்கிரமநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சந்திப்பு


ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் என்டோனியோ குட்டேரஸ் அவர்கள் தனது இளைஞர் அலுவல்கள் தூதுவராக நியமித்துள்ள இலங்கையைச் சேர்ந்த திருமதி ஜயத்மா விக்கிரமநாயக்க  (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.

இலங்கையின் நற்பெயரை உலகம் முழுவதும் அறியச்செய்து திருமதி ஜயத்மா விக்கிரமநாயக்க தாய்நாட்டிற்கு பெற்றுக்கொடுத்த கௌரவத்தினை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இலங்கையின் இளைய தலைமுறையினருக்காகவும் உலகவாழ் இளையதலைமுறையினருக்காகவும் அவர் பாரிய சேவை ஆற்றக்கூடிய வாய்ப்பு கிடைக்கவேண்டுமெனவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments