மக்கா ஹரம் ஷரீப் மீது நேற்று தாக்குதல் நடாத்தத் திட்டமிருந்த தீவிரவாதக் குழுக்களின் திட்டங்களை முறியடித்துள்ளதாக சவுதி உற்துறை அமைச்சு தகவல்களை மேற்கோள் காட்டி சவுதி அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்கொலைத் தாக்குதல் நடாத்தத் தயாராக இருந்த நபர் ஒருவர் சவுதி பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு இடம்பெற்ற பலத்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ள அதேவேளை குறித்த நபர் குண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நன்பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
0 Comments