Subscribe Us

header ads

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் ஒருவரை அமைச்சர் ஒருவர் பாதுகாப்பதாக கூற ராஜிதவுக்கு வெட்கம் இல்லையா ?


இலங்கை அரசியலில் ராஜிதவைவும் அவரது மகன் சதுர சேனாரத்னவையும் போன்ற பொய்யர்கள் இருக்க முடியதுஎனவும் இவர்கள் இருவரும் பொய்யின் பிறப்பிடம் பா உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

பொது பல சேனாவை நோர்வே உருவாக்கியதாக மஹிந்த அரசாங்கத்தில் கூறியவர் அண்மையில் முன்னாள் பாதுகாப்புசெயளாலர் என கூறினார்.

இப்பொது ஞானசார தேரரை நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பாதுகாப்பதாக அமைச்சரவை தீர்மானம்அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை வழங்கப்படாத நிலையில் அதுதொடர்பிலும் பொய் கூறியுள்ளது இப்பொது அம்பலமாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டன் பிரியசாத் எனும் வாலிபர் கைதான போது அவர் நில்பலகாயவை சேர்ந்தவர் எனகூறி பின்னர் மூக்குடைந்துகொண்டார்.

முன்னர் பொதுபல சேனாவை உருவாக்கியது நோர்வே என்றார் பின்னர் கோத்தா என்றார் இப்பொது நல்லாட்சிஅமைச்சர் பாதுகாப்பதாக கூறுகிறார்.

அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த ஒருவர் இவ்வாறு நடப்பது மிகவும் கவலைக்குரிய விடயம் என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments