காலம் மாறி விட்டது. கல்வியிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. நாமும் உரிய வேகத்துக்கு ஓடும் போதே தாக்குப் பிடிக்க முடியும். இல்லையேல் எம்மை விட்டுவிட்டு உலகம் முன்னே போய் விடும்.
முன்னர் ஒரு காலம் இருந்தது இலங்கையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்தால் அரச தொழிலொன்றை இலகுவில் பெற்றுக் கொள்ளலாம். போட்டி இல்லை.
இன்று எதிலும் பலத்த போட்டி நிலவுவதுடன், அரசும் தொழில் வாய்ப்புக்களையும் வழங்க மறுத்து வருகிறது. இது பட்டதாரிகள் மத்தியில் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உரிய காலத்துக்குள் தொழில் கிடைக்காமை, தகுதிக்கு ஏற்ற தொழில் கிடைக்காமை என்பன பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாகும்.
பலத்த போட்டி அடிப்படையில் க பொ த (உ/த) த்தில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் நுளையும் இவர்கள் படிப்பை முடித்ததும் நிர்க்கதியாகி, விரக்தியின் விழிம்புக்குச் செல்ல நேரிடுதல் அவலமே.
எனவே மாணவர்கள் பட்டத்தை முடித்து தொழில் ஒன்றை எதிர்பார்த்திருப்பது பொருத்தமற்ற செயலாகவே உள்ளது. அவர்கள் அரச உயர் பரீட்சைகளுக்குத் தயார்படுத்த வேண்டும். பட்டம் முடித்ததும் பின்வரும் பரீட்சைகளுக்குத் திறந்த (open) போட்டிப் பரீட்சை நடைபெறும். அதில் தனக்கு அதிக நாட்டமுள்ள ஒரு பரீட்சைக்கு அல்லது ஏதாவதொரு பரீட்சைக்கு இன்றிலிருந்தே பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே தயாராக வேண்டும்.
1) இலங்கை நிருவாக சேவை - SLAS
2) இலங்கை கல்வி நிருவாக சேவை - SLEAS
3) இலங்கைத் திட்டமிடல் சேவை - SLPLS
4) இலங்கை வெளிநாட்டு சேவை - SLFS
5) இலங்கை இறைவரி சேவை - SLTOS
6) இலங்கை பொலிஸ் சேவை - SLPS
7) இலங்கை கணக்காளர் சேவை - SLACS
8) இலங்கை சுங்க சேவை - SLCS
9) இலங்கை பல்கலைக்கழக பதிவாளர் சேவை - SLURS
10) இலங்கைப் பொறியியலாளர் சேவை - SLTS
11) இலங்கை கணக்காய்வாளர் சேவை - SLAUS
பட்டத்தைப் பெற்றால் போதும் தொழில் ஒன்றைப் பெறலாம் என்றிருந்தால் சிறந்த, தகுதியான தொழில் கிடைக்காது போய்விடும். மேலுள்ள பரீட்சைகளில் தேறும் போதே ஒரு நிறுவனத்தின் பணிப்பளர் (Director), ஆணையாளர் (Commissioner) போன்ற பதவிகளைப் பெறலாம். அதுவே எமது சமூகத்துக்கும் இன்று அவசியமான பதவிகளாக உள்ளன. இப்பரீட்சைகள் நுண்ணறிவு (IQ), பொது அறிவு (GQ) ஆகிய பாடப் பரப்பையே கொண்டிருக்கும். இப்பரீட்சைகளில் நீண்டகாலத் தயார்படுத்தல் இல்லாது வெற்றி பெற முடியாது. பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலேயே இந்தப் பரீட்சைகளையும் இலக்கு வைத்துப் (Targets) படிக்க வேண்டும்.
அல்லது ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களைப் பெற்று தனியார் துறையில் நல்ல சம்பளத்துக்கான தொழில்களைப் பெற வேண்டும்.
#நீங்கள் #பட்டதாரி #மாணவனா? #இன்றே #தயாராகுங்கள்
Whatsapp Recieved
0 Comments